அமெரிக்காவின் நியூயார்க் நகரம். அது ஒரு மருத்துவமனையின் சிறப்பு வார்டு. உள்ளே இருந்த படுக்கையில் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். அவருக்கு வந்து இருந்தது உயிரைக் கொல்லும் ஒருவகைப் புற்று நோய். இன்னும் ஓரிரு நாள்கள் கூட அவர் தாங்க மாட்டார் என்று மருத்துவர் பேசிக் கொண்டு இருந்தார்கள். அன்று மாலை நேரத்தில், அந்த முதியவரின் வார்டுக்கு, அவரை கவனித்து கொள்ளும் நர்ஸ் வந்தார். `சார்... உங்களைப் பார்க்க உங்க மகன் வந்து இருக்கார்.’’ கிழவர் கண்ணைத் திறந்து பார்த்தார். நீர்த் திரையிட்ட கண்களால், எதிரே மங்கலாக நர்ஸுக்கு அருகே ஓர் உருவம் இருந்ததைப் பார்த்தார். அவருக்கு எதிரே 20 வயதுக்குள் இருக்கும் ஓர் இளைஞன் நின்று கொண்டு இருந்தான். சீருடை அணிந்து இருந்தான். அவன் அணிந்து இருந்த சீருடை 'யூத்மரைன்' (Youth Marine) என்கிற, அமெரிக்க அரசு நடத்தும் இளைஞர்களுக்கான ஒரு திட்டத்துக்கானது. படுக்கையில் இருந்த முதியவர், நர்ஸிடம் தன் மகன் `யூத் மரைன்’ புரோக்ராமில் இருக்கிறான் என்று ஏற்கனவே சொல்லி இருந்தார். அதனால் தான், நர்ஸ் அவனைச் சரியாகக் கண்டு பிடித்து அவர் முன்னே நிறுத்தி இருந்தாள். இளைஞன் ப...
thanks
ReplyDelete