Posts

படித்ததில் பிடித்தது..

  20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..(1955-1975) போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்... இது எப்படி சாத்தியம்..??? ஒரு சிறிய தெற்காசிய நாடு..வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி??? அதற்கு அந்த அதிபர் அமெரிக்க போன்ற வல்லரசை தோற்கடிப்பது மிகவும் கடினம்.. ஆனால் ஒரு சரித்திர புகழ்பெற்ற மாவீரனின் வீரமும் தீரமும் செறிந்த கதையை படித்தேன்.....அது எனக்குள் எழுப்பிய கனலால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது...அவரின் போர் தந்திரங்கள்.. யுக்திகளை எங்கள் போரில் கடைபிடித்தோம்..வெற்றி கிடைத்தது என்றார்... யாரந்த மாவீரன்... பேரரசன்..என பத்திரிகையாளர் வினவ... வேறு யாருமில்லை..  கிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன் தான்...  வியட்நாமில் மட்டும் இப்படி ஒரு மாவீரன் அவதரித்திருந்தால் இந்நேரம் உலகம் எங்கள் கைகளில் இருந்திருக்கும்..என்றார். சில வருடங்கள் கழித்து அந்த அதிபர் இறந்து போனார்... அவரது கல்லறையில் அவரது விருப்பப்படி பொறிக்கப்பட்ட வாசகம்... ""ராஜராஜனின் பணிவான பணியாள் இங்கே ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்..."" இப்பொழுதும் அங்கே...

பகல் கனவு

  ஆயிரம் ஆயிரம் வண்ணத்துப் பூச்சிகள் மின்மினியென கண்சிமிட்டி சிறகடித்துப் பறந்தன. மலர்தோறும் நறுந்தேனினைப் பருகிட கருவண்டுகள் ரீங்கரித்து ஆர்ப்பரித்துப் பறந்தன. வண்ணமலர்கள் விதவிதமாய் நறுமணம் பரப்பி கொல்லையில் பூத்துக் குலுங்கின. எண்ணற்ற காய்கறிகள் எடுத்தியம்ப இயலா வண்ணம் காய்த்துக் கிடந்தன. அதனருகே இருந்த கடலிலே வெள்ளி அலைகள் வட்டமிட்டுத் தாவித்தாவித் தாள்மலரை முத்தமிடத் துடித்தன. வசந்தத் தென்றல் வாயில் வழி நுழைந்து மெல்லக் கூந்தலை வருடியது. வீட்டின் முற்றத்திலோ புதுமணல்பரப்பி பூசி மெழுகிய மென் தரையில் கண்கவர் வண்ணக்கோலங்கள் எண்ண அலைகளுக்கேற்ப பிரகாசித்தன. அவ்வில்லத்தின் உள்ளோ அகிற்புகையும், சந்தனமும் நாசியைத் துளைத்து ஊடுருவி உள்ளத்தில் ஏதேதோ மாற்றங்களை எழச்செய்தன. அம்மட்டுமா? தோரண வாயில்களும், வகை வகையான அலங்கார விளக்குகளும் ஜொலித்து அவ்வில்லத்தின் மிளிர்வுக்கு மேலும் மெருகூட்டின. அருகருகே உள்ள மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் யாவினையும் விட விண்ணை முட்டும் அளவு பெருமித்தத்துடன் இருந்தது அவ்வீடு. எட்டுத்திக்கெங்கினுமிருந்து திரளாகத் திரண்டுவரும் விருந்தினர் கூட்டங்கள் மூக்கின் மேல்...

வளைகளில் வசிக்கும் எலிகள்

 👌👌😌🥰   சந்தர்ப்பம் பார்த்து யுதிஷ்டிரரிடம் கேள்வி கேட்டார்"மகனே, ஒரு வேளை காட்டில் 🔥நெருப்புப் பற்றி எரிந்தால் எந்த மிருகம் மட்டும் பாதுகாப்போடு இருக்கும்". யுதிஷ்டிரர் பதில் சொன்னார்" தந்தையே, காட்டில் நெருப்புப்🔥 பற்றிக் கொண்டால் சுயேச்சையாகவும், பயமற்றும் சுற்றித் திரியக் கூடிய சிங்கம்,🐅🐆🐘🦌 புலி ,சிறுத்தை,யானை மற்றும் மிக வேகமாக ஓடக் கூடிய மான் போன்ற அனைத்து மிருகங்களும் காட்டுத் தீயில் எரிந்து சாம்பலாகி விடும்.  ஆனால் வளைகளில் வசிக்கும் எலிகள்🐀🐀🐀 மாத்திரம் அனல் தணிந்த பிறகு வெளியில் வந்து அமைதி நிறைந்த வாழ்க்கை வாழும்...!" மகனே ,யுதிஷ்டிரா உன் பதிலால் நான் கவலையற்றவன் ஆனேன். செல், பாதுகாப்பாக இரு, புகழுடன் இரு என்று ஆசீர்வாதம் கொடுத்தார்.

மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள்!

தல் மா   மனிதர் :* *முதல் மாமனிதர் :* 150 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு குதிரை வண்டியில் ஒரு சிறுவன் பள்ளிக்கு செல்வது வழக்கம். *ஒரு முறை வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம் நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார்.* அதற்கு ஒவ்வொரு மாணவர்களும் வக்கீல், ஆசிரியர், மருத்துவர் என சொல்லி கொண்டே வந்தனர், அப்போது *ஒரு மாணவன் கூறினான் “நான் குதிரை வண்டிக்காரனாவேன் ”.* சுற்றியிருந்த மாணவர்கள் எல்லாம் சிரித்தனர், ஆசிரியரும் அவனை கேலி செய்து உட்கார சொன்னார். அந்த சிறுவன் வீட்டிற்கு சோகமாக வந்ததை பார்த்து தாய் என்னவென்று கேட்க, நடந்ததை கூறினான் அந்த சிறுவன். அதை கேட்ட அந்த தாய் மகன் மீது கோபம் கொள்ள வில்லை, அந்த தாய் கேட்டார் *“ நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன காரணம்”.* அந்த சிறுவன் கூறினான் “தினமும் பள்ளிக்கு செல்லும் போது குதிரை வண்டிக்காரன் குதிரை ஓட்டுவதை பார்ப்பேன், அவர் குதிரை ஓட்டுவது அழகாக இருக்கும். *எனக்கும் அதுபோல் குதிரை வண்டி ஓட்ட வேண்டும் என்று ஆசை, அதனால் தான் அப்படி கூறினேன்”.* இதை கே...

கதை அல்ல நிஜம்

Image
                                          காக்கையும் குருவியும் இரை தேடியது குருவிக்கு நெல்மணி கிடைத்தது காக்கைக்கு முத்து கிடைத்தது நெல்லைத் தின்றுவிட்டது குருவி முத்தை வைத்து விளையாடியது காக்கை எனக்கு அதைக் கொடு என்று அதிகார தோரணையில் கேட்டது குருவி தர மறுத்த காக்கை, மரத்தில் போய் உட்கார்ந்தது காக்கையை விரட்டு என்று மரத்திடம் சொன்னது குருவி. மறுத்தது மரம். மரத்தை வெட்டு என்று மரவெட்டியிடம் சொன்னது குருவி. அவன் மறுத்தான். மர வெட்டிக்கு தண்டனை கொடு என்று பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டது.மறுத்தார் தலைவர். பஞ்சாயத்து தலைவரை நீக்க அரசனிடம் சொன்னது. அரசன் மறுத்தான். ராஜாவை திட்ட ராணியிடம் சொன்னது.  ராணி மறுத்தாள். ராணியின் ஆடையை கடிக்க எலியிடம் சொன்னது.  எலி மறுத்தது. எலியைக் கொல் என்று பூனையிடம் சொன்னது.  பூனை மறுத்தது. பூனையைக் கடி என்று நாயிடம் சொன்னது. நாய் மறுத்தது. பக்கத்தில் கிடந்த குச்சியிடம் அந்த நாயை அடி என்றது. குச்சி மறுத்தது. தீயிடம் சென்று குச்சியை எரி என்றது. தீ...
Image
அமெரிக்காவின் நியூயார்க் நகரம். அது ஒரு மருத்துவமனையின் சிறப்பு வார்டு. உள்ளே இருந்த படுக்கையில் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். அவருக்கு வந்து இருந்தது உயிரைக் கொல்லும் ஒருவகைப் புற்று நோய். இன்னும் ஓரிரு நாள்கள் கூட அவர் தாங்க மாட்டார் என்று மருத்துவர்  பேசிக் கொண்டு இருந்தார்கள். அன்று மாலை நேரத்தில், அந்த முதியவரின் வார்டுக்கு, அவரை கவனித்து கொள்ளும் நர்ஸ் வந்தார். `சார்... உங்களைப் பார்க்க உங்க மகன் வந்து இருக்கார்.’’ கிழவர் கண்ணைத் திறந்து பார்த்தார். நீர்த் திரையிட்ட கண்களால், எதிரே மங்கலாக நர்ஸுக்கு அருகே ஓர் உருவம் இருந்ததைப் பார்த்தார். அவருக்கு எதிரே 20 வயதுக்குள் இருக்கும் ஓர் இளைஞன் நின்று கொண்டு இருந்தான். சீருடை  அணிந்து இருந்தான். அவன் அணிந்து இருந்த சீருடை 'யூத்மரைன்'  (Youth Marine) என்கிற, அமெரிக்க அரசு நடத்தும் இளைஞர்களுக்கான ஒரு திட்டத்துக்கானது. படுக்கையில் இருந்த முதியவர், நர்ஸிடம் தன் மகன் `யூத் மரைன்’ புரோக்ராமில் இருக்கிறான் என்று ஏற்கனவே சொல்லி இருந்தார். அதனால் தான், நர்ஸ் அவனைச் சரியாகக் கண்டு பிடித்து அவர் முன்னே நிறுத்தி இருந்தாள். இளைஞன் ப...

7 wonders

Image